திண்டிவனத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! டாக்டர் இராமதாஸ் விடுத்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே  ஓடையில் குளிக்கச் சென்ற மாணவி உயிரிழப்புக்கு  இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், வெள்ளத்தில் சிக்கிய மாணவியை மீட்க வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூர் கொஞ்சிமங்கலம் ஒடையில் குளிக்கச் சென்ற நர்மதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து  பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓடையில் குளிக்கச் சென்ற அனுஸ்ரீ என்ற மாணவியைக் காணவில்லை.  அந்த மாணவியை  விரைந்து மீட்டெடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Say About Konjimangalam School girl river accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->