இந்துக் கோவில் மீது தாக்குதல் - வங்காளதேசத்தில் 4 பேர் கைது.!
four peoples arrested for hindu temple attack in bangaladesh
வங்காளதேசம் நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல், இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை கண்டித்து இந்தியாவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சுனம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தோராபஜாரில் இந்து கோவில் மற்றும் இந்துக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது ஆகாஸ் தாஸ் என்பவர் முகநூலில் வெளியிட்ட பதிவு வன்முறையை தூண்டியதாகவும், அந்த பதிவை நீக்கியபின்னரும் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலானதால் வன்முறை வெடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ்தாசை கைது செய்தனர். இதற்கிடையே ஒரு குழுவினர் ஆகாஷ்தாஸை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்து கடத்திச் செல்ல தயாராக இருந்தது. இதனால், போலீசார் ஆகாஸ் தாசின் பாதுகாப்பு கருதி அவரை சதார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
English Summary
four peoples arrested for hindu temple attack in bangaladesh