சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? பாமகவின் கேள்வியால் பேரவையில் அமளி, வெளிநடப்பு !!
Pmkmla gkmani asked about caste wise census in TN
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பாமக சட்டமன்ற தலைவர் ஜிகே மணி தமிழ்நாட்டில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஜிகே மணி உள்ளிட்டோர் பலமுறை என்னை சந்தித்து சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து நான் பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். உங்கள் நிலைப்பாடு என்னவோ அதே தான் என்னுடைய நிலைப்பாடு. உங்களுக்கு சாதகமாகத்தான் நாங்கள் இருக்கிறோம். சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல" விளக்கம் அளித்தார்.
அதனை ஏற்க மறுத்த பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ ஜி.கேமணி தொடர்ந்து சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் பேரவையில் விவாதிக்க முற்பட்டார்.
அப்போது பதறிப்போன அமைச்சர் துரைமுருகன் பாமக எம்எல்ஏ ஜிகே மணி எழுப்பி கேள்விக்கு ஏற்கனவே முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதற்கு மேல் அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்ததோடு நீதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்படி கூறிவிட்டு அமர்ந்தார். ஆனால் பாமக எம்எல்ஏக்கள் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்காததால் தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
English Summary
Pmkmla gkmani asked about caste wise census in TN