பாஜக நிர்வாகியை சுத்து போட்ட ED.. பின்னணியில் முக்கிய புள்ளி.. அதிரும் தலைநகரம்!! - Seithipunal
Seithipunal


நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகியிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதனை அவர் மறுத்தார். 

ஆனால் அவர் மீது திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் சிக்கியது தொடர்பாக தாம்பரம் மாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் துறையினரும் அமலாக்க துறையினரும் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளது பாஜகவினரை கலங்கடிக்க செய்துள்ளது. தமிழக பாஜகவின் தொழில் பிரிவு மாநில தலைவர் கோவர்தன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தின் பங்கு இருப்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே தமிழக பாஜக தொழில் பிரிவு மாநில தலைவர் கோவர்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்குத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை காவல்துறையினர் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி கோவர்தன் சென்னையில் பல விருந்தினர் மாளிகையை நடத்தி வருகிறார். அவர் பணக்காரர்களுக்கும் விஐபிகளுக்கும் உயர்ரக கார்களை சப்ளை செய்து வரும் டீலராக இருந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு 6 கோடி ரூபாய் பணம் அவரது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக கிடைத்த தகவலின் பெயரில் இந்த சோதனையானது நடத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police and Ed search of nainar money trail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->