ரூ.56.26 கோடி மதிப்பிலான காவல்துறை புதிய கட்டடங்கள்!... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

அந்தவகையில், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 169 காவலர் குடியிருப்புகளும், ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 காவல் நிலையங்கள் மற்றும்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் உள்ளிட்ட 2 காவல் துறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதே போல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 18 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள், சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


மேலும், தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police new buildings worth rupees 56 crore cm mk stalin video presentation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->