அதிமுகவிற்கு போடும் ஓட்டு பாஜக ஓட்டு..மு.க ஸ்டாலின் விமர்சனம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நாடு முழுவதும் வேப்பல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி திமுக வேட்பாளர் ஜி செல்வத்தை ஆதரித்து முதல்வர் மு க ஸ்டாலின் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில்  மு.க ஸ்டாலின் பேசியதாவது,

எடப்பாடி பழனிச்சாமி எதில் நம்பர் 1 என்றால் தமிழ்நாட்டு உரிமைகளை பாஜக அரசிடம் அடகு வைத்ததில் நம்பர் 1. பாஜக தமிழ்நாட்டில் இந்தியை திணித்தபோது திமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதிமுக அறிஞர் அண்ணா மும்மொழி கொள்கையை ஆதரித்தார் பச்ச பொய் பேசினாங்க, அரசியல் பச்சோந்திதான் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிடுவது போல் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். அதிமுகவிற்கு போடும் ஓட்டு பாஜகவிற்கு போடும் ஓட்டு என்று பேசினார் முதல்வர் மு க ஸ்டாலின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political Chameleons edapadi pazhaniswamy mkstalin speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->