258 கோடி ரூபாயில், பாஜகவுக்கு மட்டும் 212 கோடி ரூபாய் நன்கொடை.! திமுக, அதிமுகவுக்கு எவ்வளவு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம் வழங்கி வருகின்றது. இதில், அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தும் நிதியின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற நன்கொடை விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. அதில்,

கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வரவு-செலவு விவரங்களை மொத்தம் உள்ள 23 தேர்தல் அறக்கட்டளைகளில் 16 அறக்கட்டளைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதில் 7 அறக்கட்டளைகள் மட்டுமே தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை அளித்துள்ளன.

பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து 2020-21-ம் நிதியாண்டில் ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் ரூ.258.43 கோடி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில் 82 சதவீத தொகையான ரூ.212.05 கோடியை பாஜக மட்டும் பெற்றுள்ளது. 

இரண்டாவதாக ஐக்கிய ஜனதாதளம் 10.45 சதவீத தொகையான ரூ.27 கோடியை பெற்றுள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆம்ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, லோக்தந்திரிக் ஜனதாதளம் உள்ளிட்ட 10 காட்சிகள் சேர்ந்து ரூ.19.38 கோடியை பெற்றுள்ளன.

இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political Donation data bjp dmk admk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->