அதிமுக-பாஜக கூட்டணி.. "முடிவு அவங்க கைல தான்".. போட்டு உடைத்த பொன்.ராதாகிருஷ்ணன்..!!
Pon RadhaKrishna comments on AIADMK BJP alliance
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது இதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது "பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இது தொடருமா என்பது கட்சியின் மத்திய தலைமையும், மாநில தலைமையும் முடிவு செய்யும். எனவே கூட்டணி என்பது அவர்கள் கையில் தான் உள்ளது.
அதிமுக பாஜக இடையே கருத்து வேறுபாடு தற்போது நிலவி வருகிறது. கருத்து வேறுபாடு இல்லாத கட்சி எங்கு உள்ளது? கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் எங்கு உள்ளது? அதிமுக தொடர்பான பிரச்சனையை அதிமுகவினர் பார்த்துக் கொள்வார்கள்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களையும் புதுச்சேரியில் ஒரு இடத்தையும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
அதற்காக திட்டமிட்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம். கருத்து வேறுபாடு காரணத்தால் சமீப காலங்களாக பலர் பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர் அதை தவிர்க்க முடியாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.
English Summary
Pon RadhaKrishna comments on AIADMK BJP alliance