ஈவெ ராமசாமியின் சிலை முகத்தை இரும்பு கம்பியால் அடித்து உடைத்த செல்லக்கிளி.! பதற்றம் - போராட்டம்.!
PONNERI EVR STATUE DAMAGE
பொன்னேரி அருகே ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் ராமசாமியின் சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியின் பேருந்து நிலையத்தில் ஈவெ ராமசாமியின் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதாக திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஈவெ ராமசாமியின் அந்த சிலையில் முகம் மற்றும் மூக்குக் கண்ணாடி சேதப்படுத்தியதாக திராவிட கழகத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பொன்னேரி காவல் நிலையத்தில் "நான் தான் பெரியார் சிலையை இரும்புக்கம்பியால் செய்த படுத்தினேன்" என்று செல்லக்கிளி என்பவர் சரண் அடைந்தார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
English Summary
PONNERI EVR STATUE DAMAGE