இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய முடிவு?! - Seithipunal
Seithipunal


பல்வேறு பிரிவுகளின் கீழ் பாப்புலர் பிரிண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று, பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

சதி திட்டங்களில் ஈடுபடுவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இந்த அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை -NIA) அதிகாரிகள், அமலாக்கத்துறை (ED) இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 11 பேர் கைது செய்யப்பட்டு, 8 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவில் என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவில் நடைபெறும் போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை நாடு முழுவதும் தடை செய்வதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வெளியான அந்த உறுதியான தகவல் தெரிவிக்கின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது வைக்கப்படக்கூடிய முக்கிய காரணம், வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய ஒரு நெட்வொர்க்கை அமைத்து, பல கோடி ரூபாய் நிதியை திரட்டி இருப்பதை அமலாக்கத்துறை அண்மையில் கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், சட்டவிரோதமாக பெற்ற பணத்தை தனி நபர்களுக்கு பிரித்து வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த பணத்தை வைத்து பல சதி திட்டங்கள் செய்ய முயன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த இவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Popular Front Of India NIA Raid issue ban


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->