திராணியற்ற அரசாங்கம்!...என்னைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது!...மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி!
Powerless governmen talking about me is ridiculous edapadi reply to mk stalin
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் , விருதுநகரில் என்னைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை தெரிவித்து உள்ளார் என்றும், அவர் என்னைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நாங்கள் வழங்கினோம் என்றும், எனது ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள், 6 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்ததாக தெரிவித்த அவர், தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடைபெறுவதாக விமர்சித்தார்.
காவிரி குண்டாறு திட்டம், சேலத்தில் உள்ள கால்நடை பூங்கா என திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை திமுக புறக்கணிப்பதாகவும், திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதையே காரணம் என்று கூறினார்.
மேலும், தேர்தலில் அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும் என்றும், அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று தெரிவித்தார்.
English Summary
Powerless governmen talking about me is ridiculous edapadi reply to mk stalin