பாலியல் வழக்கில் ப்ரஜ்வால் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதியின் எம். பி. யாக இருப்பவர் ப்ரஜ்வால் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் ஆவார். இவரது தந்தை எச். டி. ரேவண்ணா ஒலேநரசிபுரா தொகுதி எம்எல்ஏ வாக உள்ளார்.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹாசன் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப்ரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சுமார் 2900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்த நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ப்ரஜ்வால் ஜெர்மனி தப்பிச்சென்று விட்டார்.

தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ப்ரஜ்வாலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி கர்நாடக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகௌடாவும் ப்ரஜ்வால் தாயகம் திரும்பி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

 

இந்நிலையில், கடந்த 27ம் தேதி ப்ரஜ்வால் ஒரு வீடியோ வெளியிட்டு தன்னை இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே சிக்க வைத்துள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் 34 நாட்களாக தலைமறைவாக இருந்த ப்ரஜ்வால், இன்று அதிகாலை பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prajwal Revanna Arrested in Bengaluru Kempe Gowda International Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->