'தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம், அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்'; பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!
Premalatha Vijayakanth has supported the Tamil Nadu governments budget
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் பழனிக்கு சென்றுள்ளார். விழாவில் கலந்துக்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என்று தெரிவித்ததோடு, கடந்த 2006-ஆம் ஆண்டு விஜயகாந்த்தின் முதல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல்வேறு திட்டங்களை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் தமிழ்மொழி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்றும், அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளை கற்போம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு எனவும் பேசியுள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நமது 40 நாடாளுமன்ற தொகுதிகளை மாற்றினால், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் கைகோர்த்து தமிழகத்துக்காகவும், மக்களுக்காகவும் நாங்கள் போராடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Premalatha Vijayakanth has supported the Tamil Nadu governments budget