அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான் - பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) மறைந்த நடிகர் விஜயகாந்த் தலைமையில் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இதையடுத்து இக்கட்சி 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது. 

மேலும் இரண்டு தொகுதிகளில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது விஜயகாந்த் மட்டுமே அந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது 29 இடங்களை பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் தோல்வியையே தழுவிய தேமுதிக தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு மறைந்தார். இதையடுத்து 2024 மக்களைவைத் தேர்தலில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தோல்வி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம் தான். நாங்கள் கடைசி வரை போராடி தான் தோற்றுள்ளோம். இதையே படிக்கல்லாக மாற்றி, வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்போம். தே மு தி க விற்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'" என்று பிரேமலதா கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha Vijayakanth Says About Election Result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->