ஓ அப்படியா!காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலால் ஜனாதிபதி திரௌபதி முர்மு அசாம் பயணத்தை ரத்து செய்தார்....!!!
President Draupadi Murmu canceled her Assam visit due terrorist attack Kashmir
அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக இன்று மாலை 'ஜனாதிபதி திரௌபதி முர்மு ' செல்ல இருந்தார்.இதில் நாளை நடக்கவிருக்கும் கவுகாத்தி பல்கலைக்கழக 32-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருந்தார்.

அதுமட்டுமின்றி, மாநில அரசு விழாவில், நடன கலைஞர் சோனல் மான்சிங்குக்கு விருது வழங்க இருந்தார்.
ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் காரணமாக ஜனாதிபதி தனது அசாம் பயணத்தை தற்போது ரத்து செய்து விட்டார்.
இதுதொடர்பாக அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடினமான காலங்களை கடக்க சற்று நேரம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
President Draupadi Murmu canceled her Assam visit due terrorist attack Kashmir