ரவுடிசத்தை கட்டுப்படுத்த... கோவையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு ஏன்? கோவை மாநகர காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


குற்றவாளிகள் மற்றும் ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதற்கு காவலர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது பணியின் ஒரு பகுதி (Part of the Duty) என்று, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆல்வின் (40 வயது) என்ற ரவுடியை கோவை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

நள்ளிரவு 2.30 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ஆல்வினை பிடிக்கச் சென்ற போலீசாரை, அவர் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்று உள்ளார்.

இதனை அடுத்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் இரண்டு கால்கள் முட்டிகளிலும் குண்டு பாய்ந்து, மருத்துவமனைகள் தற்போது ஆல்வின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், "காவல்துறை கண் எதிரே கொலை போன்ற பெரிய குற்றங்கள் நடக்கக் கூடாது, அப்படி நடக்கும் சமயங்களில் காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

பயங்கர குற்றவாளிகளை நோட்டம் விடும் போது காவலர்கள் தங்களுடைய தற்காப்புக்காகவும் துப்பாக்கியை எடுத்து செல்கின்றனர்.

துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்து செல்வதில்லை. ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை தாண்டி , காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்காது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice Coimbatore Commissioner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->