அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு  சென்றடைந்தார். 2 நாள் பயணமாக எகிப்துக்கு பிரதமர மோடி சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசி நகரில் இருந்து கெய்ரோவுக்கு விமானம் மூலமாக சென்றடைந்துள்ளார். இந்தபயணத்தின்போது எகிப்து உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அவர், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவுள்ளார். 

மேலும் எகிப்தில் வசித்து வரும் இந்தியர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து இந்திய வீரர்கள போரிட்டனர்.

அந்தப் போரில் உயிர் தியாகம் செய்த சுமார் 4,000 இந்திய வீரர்களின் நினைவாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார். 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டுக்கு இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi reached Egypt after completing his visit to America


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->