அப்படியா!!!ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்தவர் பிரதமர் மோடி..! தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக அமரும்!!!- ஓபிஎஸ்
Prime Minister Modi solved Jallikattu issue in one day BJP definitely sit tamil Nadu OPS
பா.ஜ.க. கட்சி சார்பில் தமிழகத்தில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ,தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது,"எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி.
அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பரவலாக பேசப்பட்டு கலவையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
English Summary
Prime Minister Modi solved Jallikattu issue in one day BJP definitely sit tamil Nadu OPS