தேனி மாவட்டத்தில் தங்க .தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் போராட்டம்!
DMK workers lead protest in Theni district
100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க .தமிழ்ச்செல்வன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துவரும் மத்திய பாஜாக அரசை கண்டித்து இன்று திமுக சார்பில்,தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாவட்டம் ,ஒன்றியம் வாரியாக அங்கங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுளம் தெற்கு ஒன்றியம் ஜெயமங்கலத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க .தமிழ்ச்செல்வன் தலைமையில், ஜெயமங்கலம் கிளை பொறுப்பாளர் கருப்பையா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதேபோல் பொம்மிநாயக்கன்பட்டியில் தேனிமாவட்ட அவைத் தலைவர் PT.செல்லபாண்டியன் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கிராமப்புற ஏழை மக்கள் கலந்துகொண்டனர்.
English Summary
DMK workers lead protest in Theni district