உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள் இப்போது பார்க்கிறார்கள் - பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி பதிவு ! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறத் தேவையான 272 இடங்களில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை இரு கட்சிகளுக்கும் கிடைக்காததால் இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " அவர்கள் உங்களை எவ்வளவு சோதித்தாலும், என்ன சொன்னாலும், உங்கள் நம்பிக்கையை குலைத்தாலும் நீங்கள் பின் வாங்கவே இல்லை.

அவர்கள் உங்களை பற்றி அவதூறாக பொய் பிரச்சாரம் செய்த போதிலும், நீங்கள் உண்மைக்காக போராடுவதை நிறுத்தவில்லை. அவர்களது கோபமோ, அவர்கள் உங்கள் மேல் உமிழும் வெறுப்புணர்வோ எதுவுமே உங்களை வெல்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை.  அவர்கள் உங்களுக்கு வெறுப்பை பரிசளித்தாலும் கூட நீங்கள் கருணையோடு போராடினீர்கள்.

உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள் இப்போது பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு துணிச்சலானவர் என்பதை உங்களோடு இருக்கும் நாங்கள் அறிந்து இருக்கிறோம். உங்கள் சகோதரியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi Posted about Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->