பீர் முதல் ஒயின் வரை! அவைமுன் வைக்கப்பெற்ற முக்கிய ஏடுகள்! காரியத்தில் கண்ணாக இருக்கும் திமுக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன், மறைந்த முன்னாள் எம்எல்ஏ லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்தார். அதேபோன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தான அறிவிப்பாணைகள் மற்றும் சட்டம் முன் வடிவுகள் இன்றைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டது. 

அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று தமிழ்நாடு மதுபான விதிகளில் திருத்தங்கள் செய்வது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக வெளியிடப்பட்ட நான்கு அறிவிப்புகள் இன்று சட்டமன்றத்தில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு இந்திய தயாரிப்பு அயல் நாட்டு வருமானம் விதிகளில் திருத்தங்கள் செய்வது குறித்தும், தமிழ்நாடு பீர் வடிபாலை விதிகளில் திருத்தங்கள் செய்வது குறித்தும், தமிழ்நாடு மாஸ் ஒயின் விதிகளுக்கு திருத்தம் செய்வது குறித்தும், தமிழ்நாடு ஒயின் உற்பத்தி விதிகளுக்கு திருத்தங்கள் செய்வது குறித்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் அரசாணை எண் 29 படி வெளியிடப்பட்ட அறிக்கைகள் இன்று சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தமிழ்நாடு இயல்பு மாற்றப்பட்ட சாராவி, மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தி தேர்வு துறையின் கீழ் அரசாணை 31ல் வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் சட்டமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைகள் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prohibition dept notifications placed before TamilNadu Legislative Assembly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->