மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம்..அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!
Protests were held in 18 blocks in Ranipet district against the central government Minister R Gandhi
100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆர்.காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துவரும் மத்திய பாஜாக அரசை கண்டித்து திமுக சார்பில்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்கள் என 18 இடங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின் படி மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Protests were held in 18 blocks in Ranipet district against the central government Minister R Gandhi