மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்தும் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு - Seithipunal
Seithipunal


மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமைர்வு முன், மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது என்றும், அந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவும் நிலுவையில் உள்ளது என்றும் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் சுமார் 13,000 பேர் எந்த வித இடைக்கால நிவாரணமும் இல்லாமல் 10 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு சாதமாக சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை ஒரு சில வழிமுறைகளை அரசுக்கு அளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public Welfare Officer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->