இலவச லேப்-டாப், ரூ.1000 - புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டசபையில் இன்று நிதி பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:- 


* 21 வயது முதல் 57 வயது வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். (அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்)

* புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் திட்டம் தொடரும். 

* இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். 

* புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

* தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். 

* லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும். 

* காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும். 

* புதுவையில் மேலும் 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். காரைக்காலில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHERRY BUDGET 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->