கல்லூரி மாணவி மர்ம மரணம்! பின்னணியில் திமுக பிரமுகர்? நடவடிக்கை எடுக்க நடுங்கும் காவல்துறை? அண்ணாமலை ஆவேசம்!
Pudukottai college student mystery death BJP Annamalai Condemn DMK
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கருக்காகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மாணவி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
கடந்த 25 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பவில்லை என்றும், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் வடகாடு போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று அருகிலுள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டபோது அது கௌசல்யா என்பதும் உறுதியானது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்க்கு காரணம் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகரின் உறவினர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் சமூகத்தை சேர்ந்த சாதி சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.
காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
English Summary
Pudukottai college student mystery death BJP Annamalai Condemn DMK