வேங்கைவயலில் புதிய குடிநீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி.,! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கழிந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டது.

சம்பவம் நடந்து இரு வாரங்கள் ஆகும் நிலையில், மலம் கலந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சம்மந்தப்பட்ட அந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வேங்கைவயல் மேல்நிலை நீர் கேட்கத் தொட்டியை இடிக்க அரசு அனுமதித்துள்ளது.

இந்த நிலையில், புதிய நீர் தேக்க தொட்டியை கட்டுவதற்கு, திமுக எம்பி அப்துல்லா தனது எம்பி நிதியிலிருந்து ஒன்பது லட்சத்தை ஒதுக்கியுள்ளார்.

மேலும், இந்த நிதியின் மூலம் புதிய நீர் தேக்க தொட்டியை கட்டவும், புதிய குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukottai vengaivayal water tank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->