பாஜகவில் இணையப் போகும் முன்னாள் முதல்வர்!
punjab ex cm party joint to bjp
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸின் நிறுவனருமான அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைகிறார். அவர் புதிதாக உருவாக்கப்பட்ட பஞ்சாப் லோக் காங்கிரஸை பாஜகவுடன் இணைக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ஏழு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னதாக பி.எல்.சி.யில் இணைந்த ஒரு எம்பி உட்பட சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலிவால் தெரிவித்தார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கடந்த பதினைந்து நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பியள்ளார்.
அமரீந்தர் சிங் செப்டம்பர் 12 அன்று அமித் ஷாவைச் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு, பஞ்சாபில் அதிகரித்து வரும் போதைப்பொருள்-பயங்கரவாத வழக்குகள் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான எதிர்கால சாலை வரைபடம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் மிகவும் பயனுள்ள விவாதத்தை நடத்தினார்.
முன்னதாக ஜூலை மாதம், பஞ்சாப் பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் சிங் கிரேவால், லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு, பாஜகவுடன் தனது கட்சியை இணைக்கும் விருப்பத்தை அமரீந்தர் சிங் தெரிவித்ததாகக் கூறினார்.
English Summary
punjab ex cm party joint to bjp