நான்காவது இடத்தில பாஜக, முன்றாவது இடத்தில் காங்கிரஸ்.! இது வேற மாறி தேர்தல் முடிவு.!
punjab uttar pradesh election counting result
உத்தரபிரதேசம் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப் மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி பாஜக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 266 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி 132 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பிரியங்கா காந்தி பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், மற்ற காட்சிகள் 2 இடத்திலும் முன்னிலை பெற்று உள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி முதல் முறையாக அரியணை ஏறியுள்ளது.
பஞ்சாப் மாநில தேர்தல் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரப்படி மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சிரோமணி அகாலி தளம் 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக முன்னிலை எங்கும் பெறவில்லை.
மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றியும், இரு இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன.
English Summary
punjab uttar pradesh election counting result