மீனவர்கள் வாக்குக்காக விஷமம் பரப்புகிறார்கள்.! - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மீனவர் சமுதாயத்தின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தால் திமுக சார்பில் நடைபெற்ற மீனவ மாநாட்டை அடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதாக விஷமம் பரப்பப்படுகிறது என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

கடலோர காவல் படையினர் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். 

திமுக சார்பில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டை அடுத்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக விஷமம் பரப்பப்படுகிறது. எப்போதுமே ஒரு சம்பவம் நடைபெறும் போது அதை திசை திருப்புவதற்கு இது போன்ற சதி செயல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மீனவர் சமுதாயத்தின் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தில் இதுபோன்ற செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi accused spreading fake news for fishers votes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->