தமிழிசை எழுப்பிய கேள்வி.. குடி முழுகி போகப் போகுதா..? திமுக அமைச்சர் சர்ச்சை பதில்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் "முதல்வர் மு.க ஸ்டாலின் எதன் அடிப்படையில் பிரித்துப் பார்த்து ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருக்கிறார்..?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழிசை சௌந்தர்ராஜன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். விழா மேடையில் பேசிய அவர் "தெலுங்கானாவின் ஆளுநரும் புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் சொல்கிறார் என கேட்டுள்ளார்.

ரம்ஜானை கொண்டாடுவது இஸ்லாமியர்கள், கிறிஸ்துமஸை கொண்டாடுவது கிறிஸ்தவர்கள், புத்த பூர்ணிமாவை கொண்டாடுவது புத்த மதத்தினர், அதுபோல இந்துக்கள் தீபாவளி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள். என் பிறந்தநாளுக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளலாமா..? அது போல தான் தமிழக முதல்வர் இந்து மக்களுக்கு வாழ்த்து சொல்லுவது தனக்குத்தானே வாழ்த்து சொல்வது போல. எனவே மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் போல என்பதால் அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது..? இதுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் குடி முழுகி போகப் போகுதா..?" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi controversial answer to Tamilisai question


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->