செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் வழங்கவில்லை! அமைச்சர் ரகுபதி விளக்கம்!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது

இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செந்தில் பாலாஜிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியவர் "சிறை துறையில் முதல் வகுப்பு சிறைவாசிக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அது மட்டும் தான் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது. கேண்டீனில் உணவு வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் அதற்காக தொகை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 

அந்த தொகையிலிருந்து கேண்டீனில் விரும்பிய உணவை வாங்கிக் கொள்ளலாம். வெளியில் இருந்து எந்த உணவும் கொண்டுவர அனுமதிக்கப்படுவதில்லை. சிறையில் ஏசி வசதி எல்லாம் செய்து கொடுக்க முடியாது. அவ்வாறு வைத்தால் ஒரு கைதி இன்னொரு கைதிக்கு சொல்லிவிடுவார்.

எனவே அமைச்சர் என்ற முறையிலோ திமுகவைச் சேர்ந்தவர் என்ற முறையிலோ எந்த ஒரு சலுகையும் அவருக்கு வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்க ஊடகங்களில் பொய் செய்தியை பரப்புகின்றனர். 

செந்தில் பாலாஜிக்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்கவும் முடியாது, வழங்கவும் மாட்டோம். அதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதிக்கவும் மாட்டார்"என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi explain special facilities not given to SenthilBalaji in prison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->