ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்' இரண்டாவது நாள் நடைபயணம் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் இன்று காலை அகத்தீஸ்வரம் கல்லூரியில் இருந்து நாகர்கோவில் நோக்கிய நடைப்பயணத்தை  தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் 'பாரத் ஜோடோ யாத்' என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை  நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், நடைப்பயணக் குழுவினர் நேற்று அகத்தீஸ்வரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கினர். இதனையடுத்து, ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் இன்று காலை அகத்தீஸ்வரம் கல்லூரியில் இருந்து நாகர்கோவில் நோக்கிய நடைப்பயணத்தை  தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் குழுவினர், குமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் பயணம் செய்கின்றனர். இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம், பின்னர் இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை மொத்தம் 56 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும், கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Bharat Jodo Yat walk second day begins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->