ராகுல்காந்தி நடை பயணத்தில் நன்கொடை கேட்டு காய்கறி கடை உரிமையாளரை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம்' என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 150 நாள்கள் பயணம் செய்கின்றனர். இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம், பின்னர் இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் 'பாரத் ஜோடோ யாத்திரையை' 8-வது நாளாக இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கினார். 

இந்த நிலையில் கேரளாவின் கொல்லத்தில் காய்கறி கடை உரிமையாளரை மிரட்டி அவரது கடையை சில காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. 

வீடியோவில், கடை உரிமையாளர் எஸ் பவாஸ், "பாரத் ஜோடோ யாத்திரக்கு நிதி வசூல் என்ற பெயரில், என்னையும், எனது தொழிலாளர்களையும் சிலர் தாக்கினர், அவர்கள் ரூ. 2,000 கேட்டார்கள், ஆனால் என்னால் ரூ. 500 கொடுக்க முடியும் என கூறினேன். இதனால் அவர்கள் காய்கறிகளை வீசி எறிந்தனர். எனது கடை மற்றும் எனது வாடிக்கையாளர்களை அடித்து நொறுக்கினர். காங்கிரஸ் தொண்டர்கள் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் மற்றும் கடையில் இருந்த தொழிலாளர்களைத் தாக்கினர். தனது கடையை சேதப்படுத்திய 5 பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எச் அனீஷ் கானும் அடங்குவார் என்று பவாஸ் கூறினார்.

 இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று கட்சித் நிர்வாகிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கேரள காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் அறிவிப்பு வெளியிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Bharat jodo yatra Congress officials attacked the owner of a vegetable shop asking for donations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->