சந்திரசேகர ராவ்வின் கட்சி பாஜக B டீம் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநில முதலமைச்சர் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி அடுத்ததாக தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒண்றிணைத்து வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தெலுங்கானாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் ரிமோட் கண்ட்ரோல் தான் சந்திரசேகர் ராவ். பாஜகவின் பி டீம் தான் சந்திரசேகர் ராவ்வின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி என தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சியினர் மீது ஊழல் புகார்கள் உள்ளது அதன் காரணமாகத்தான் அவர்கள் பயந்து பாஜகவுக்கு துணையாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் தேசிய அளவில் உருவாகும் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் கட்சி கலந்து கொண்டால் காங்கிரஸ் பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi roasted chandrasekhar Rao


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->