கன்னியாகுமரியில் இன்று பாத யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி!
Rahul Gandhi starts Padayatra in Kanyakumari today
பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.
இந்த பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல்காந்தியை விமான நிலையத்தில் அக்கட்சியின் தமிழக பிரிவு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
அங்கிருந்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். இதன் பின்னர், கன்னியாகுமரியில் பாரத் ஜோதா யாத்ரா என்ற பாத யாத்திரையை தொடங்குகிறார்.
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை கொடித்து தொடங்கி வைக்கிறார். இந்த பாதயாத்திரை 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபெறுகிறது.
ராகுல்காந்தி, 150 நாட்கள் 3,570 கி.மீ. தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைய உள்ளார். இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
English Summary
Rahul Gandhi starts Padayatra in Kanyakumari today