சிறுமியை உப்புமூட்டைத் தூக்கிக்கொண்டு சென்ற ராகுல் காந்தி.! பாதயாத்திரையில் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான தனது பாதயாத்திரையை தொடங்கினார். விலைவாசி உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொண்ட நிலையில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை செய்ய ஆரம்பித்தார்.

நேற்று பிரியங்கா காந்தியும் அவரது கணவர் மற்றும் மகனுடன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டார்.
 இந்த நிலையில், இன்று பாதயாத்திரைக்கு நடுவில் ராகுல் காந்தி புல்லட்டில் ஜாலியாக பலம் வந்தார். சாலை விதிகளின்படி ஹெல்மெட் அணிந்து கொண்டு ராகுல் பைக் ஓட்டி சென்றார். 
 
அவருக்கு பின் ஒரு நாயை அமர வைத்தவாறு அவர் பைக் ஓட்டி மகிழ்ந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு இணையாக அவர் பைக் ஓட்டி சென்றார். 

இத்தகைய நிலையில் பாதயாத்திரைகள் கலந்து கொண்ட ஒரு சிறுமியை உப்பு மூட்டை தூக்கியவாறு சுமந்து சென்று அந்த குழந்தையுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul ganthi Carry Child In Yatra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->