சபதத்தை முடித்துவிட்டு தான்.? காங்கிரஸ் வட்டாரம் சிக்னல்.. ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கவலை.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது, வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியில் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையில், தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி, முதல் 30-ம் தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணம் இன்றுடன் நிறைவு.! -  Seithipunal

இதன் அடிப்படையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் மற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். 

இந்த தேர்தலில் சசிதரூர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வாங்கினார்.

எனது தந்தை எனக்கும் பிரியங்காவிற்கும் மன்னிக்க கற்றுகொடுத்தவர் - ராகுல்  காந்தி உருக்கமான ட்வீட்..! - Seithipunal

இது குறித்து சோனியா காந்தி கூறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, "யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடலாம். இதற்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை." என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளதாக கூறினார்.

தற்போது, ராகுல் காந்தி யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து துவங்கி கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் அடுத்ததாக பயணிக்க உள்ளார்.

அவர் இந்த யாத்திரையில் இருந்து திரும்பமாட்டார் என்றும், எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் என்றும் காங்கிரசின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் காரணமாக ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul ganthi Could not participate in leader Election of Congress 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->