பொன்னாரை புலம்ப வைத்த ராகுல்.? நடைபயணத்தின் மூலம் ஏற்ப்பட்ட மாற்றம்.. கலக்கத்தில் பாஜக.!
rahul ganthi makes tough competition in kanniyakumari fo bjp pon radhakrishnan
சமீபகாலமாகவே பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகள் அழைத்தாலும் கண்டுகொள்ளாத பொன்னார், தற்போது தானாகவே தேடி தேடிச் சென்று அனைத்து நிர்வாகிகளிடமும் நட்புறவு பாராட்ட துவங்கியுள்ளார்.
அத்துடன் தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் அன்றாடம் சென்று மக்களை சந்தித்து வருகின்றார். எப்படியாவது வரும் பாராளுமன்றத் தேர்தலில் சீட்டைப் பிடித்து விட வேண்டும், என்பதில் முனைப்புடன் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்க ராகுல் காந்தியின் நடை பயணத்தால் அவரது எதிர்பார்ப்பிற்கு பேரிடி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி குமரியில் தங்கி இருந்த 4 நாட்களும் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. எளிய மக்கள் அனைவரும் அவரிடம் இயல்பாக பாசமாக பேசினார்கள். தேசிய தலைவர் என்ற திமிர் சற்றும் இல்லாமல் வெகு சாதாரணமாக ராகுல் காந்தி மக்களிடம் பழகியது பலருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
அவரது உடை முதல் நடை பயணம், செயல்பாடுகள், பேச்சு என்று அனைத்துமே குமரி மக்களை ஈர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பாஜகவின் காதுகளுக்கு சென்றதை தொடர்ந்து இத்தனை நாட்கள் தொகுதியில் சுற்றி சுற்றி வேலை செய்தது அனைத்தும் வீணாகி விடுமோ என்ற கலக்கம் பொன்னாருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
எனவே காங்கிரஸின் இந்த நற்பெயரை எப்படி காலி செய்யலாம் என்று திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட நரி குளம் பாலம் கடந்த 2019 பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதிலிருந்த பாஜக கல்வெட்டை யாரோ சேதப்படுத்தி விட்டனர்.
இது காங்கிரஸ் கட்சியினரின் கைவண்ணம் தான் என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. எப்படியாவது ராகுல் காந்தி எடுத்துள்ள நற்பெயரை காலி செய்து விட வேண்டும் என்பதில் பொன்னார் முனைப்புடன் காணப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தனது நற்பெயரை காத்துக் கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.
English Summary
rahul ganthi makes tough competition in kanniyakumari fo bjp pon radhakrishnan