கோட்சூட்டுடன் டிப்டாக் லுக்கில் மாறிய ராகுல்காந்தி.. காணாமல் போன தாடி லுக்.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாற்றா எனும் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்த பாத யாத்திரை ஒவ்வொரு மாநிலத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையின் போது எம்.பி ராகுல்காந்தி தன்னுடைய தலைமுடி மற்றும் தாடியை இருந்தார். 

இதற்கிடையில், பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் கூட அவர் தாடியை ஷேவ் செய்யவில்லை. இத்தகைய நிலையில், ராகுல்காந்தி தற்பொழுது, புதிய லுக்குடன் கூடிய புகைப்படம் சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

மிகவும் வயதான தோற்றத்தில் இருந்த ராகுல்காந்தி தற்பொழுது புதிய லுக்கில் காட்சியளிக்கின்றார். தான் படித்த லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்ற சென்ற அவர் 21-ம் நுற்றாண்டை கேட்க கற்றுக்கொள்ளுங்கள் எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

அதற்கு பின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார். அத்துடன் இதே இங்கிலாந்து பயணத்தில் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Ganthi New Get Up on London University


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->