பாரத் ஜோடோ யாத்திரை: கொட்டும் மழையிலும் விடாத பேச்சு.. ராகுல் காந்தியின் வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தமிழ்நாட்டில் நிறைவடைந்த நிலையில், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 150 நாள்கள் பயணம் செய்கின்றார்.

மேலும், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம், பின்னர் இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை மொத்தம் 56 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும், கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தற்போது கர்நாடகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்த பாரத் ஜோடோ யாத்திரையின் 25 ஆம் நாளில் கர்நாடக மாநிலத்தில் கொட்டும் மழையில் மக்களிடம் ராகுல் காந்தி உரையாற்றி  வருகின்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul ganthi speech in karnataka while raining


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->