ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு பதிவு உயர்வு!
Rahul Ghandhi case Surat Court
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்வதாக எண்ணி, அவரின் மொத்த சமுதாயமும் திருடர்கள் என்று பொருள்படும்படி அவதூறாக பேசிய வழக்கில், ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராஜ் மாநில சூரத் பகுதியில் பாஜக எம்எல்ஏ.,வால் தொடரப்பட்ட இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கும் வரை ராகுல் காந்தி நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் தவறு செய்யவில்லை என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எச்.எஸ்.வர்மா தீர்ப்பு வழங்கினார்.
இதனால் அவர் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். மேலும், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி பேசிய டிஜிட்டல் ஆதாரங்கள் சாட்சியாக இருக்க அவர் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவிப்பது முறை என்று பல்வேறு தரப்பினரும் கருது தெரிவித்து வருகின்றனர். இப்படியே முரண்டு பிடித்தால் வரும் மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட முடியாத சூழ்நிலையும் வரலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மேலும், ராகுல் காந்திக்கு மன்னிப்பு கேட்பது இது ஒன்றும் முதல் முறையில்லை. ஏற்கனவே ரஃபேல் விவகாரத்தில் அவதூறு பேசி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
English Summary
Rahul Ghandhi case Surat Court