செப்டம்பர்-3 முதல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2.0 ஆரம்பம்.!!
RahulGandhi Bharat Jodo Yatra 2point0 begins from September3rd
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 3750 கிலோமீட்டரை 136 நாட்கள் கடந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜனவரி 30 ஆம் தேதி முடித்தார்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற இந்த பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சி பிடித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கத்திற்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி தனது பாதயாத்திரை இன்னும் முடியவில்லை என தெரிவித்திருந்தார். அந்த வகையில் வரும் செப்டம்பர் 3ம் தேதி முதல் பாரத் ஜோடோ யாத்திரை 2.0வை ராகுல் காந்தி தொடங்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மேற்கு பகுதியான குஜராத் மாநிலத்தில் தொடங்கி வடகிழக்கு பகுதியான மேகாலயா வரை இந்த யாத்திரை பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அரசியல் ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
RahulGandhi Bharat Jodo Yatra 2point0 begins from September3rd