எஸ்.பி. வேலுமணியை கட்டம் கட்டும் சோதனையோ சோதனை.!
raid in SPV suporter chendrasekar office
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கோவை பீளமேட்டில் சந்திரசேகரின் நண்பர் சந்திரபிரகாஷ் இயக்கி வரும் கே.சி.பி. நிறுவனம் மற்றும் ஆலயம் அறக்கட்டளையிலும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு, இவரது இல்லத்திலும் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, வருமானவரித்துறையினர் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமாரின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary
raid in SPV suporter chendrasekar office