ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு., சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.!
RAJENDRA BALAJI BAIL CASE INFO
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
மேலும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளிக்கவே, ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி டெல்லி, பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வருகிற 11-ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
RAJENDRA BALAJI BAIL CASE INFO