#BigBreaking || ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி
rajendra balaji case rajavarman
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
மேலும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளிக்கவே, ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறிமாறி செல்வதாக தகவல் வெளியாகியது. மேலும், அவர் டெல்லி, பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பாக சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து போலீசார் ராஜவர்மனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கு முரண் ஏற்பட்டு பிரிந்து இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
rajendra balaji case rajavarman