தமிழகத்தில் மீண்டும் ஈபிஎஸ் ஆட்சி.!! எம்ஜிஆர் பிறந்த நாளை சபதம் எடுத்த முன்னாள் அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வது பிறந்த நாளை ஒட்டி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் திருத்தங்கள் கிழக்கு பகுதி அதிமுக சார்பாக திருத்தங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி "தமிழகத்தில் புரட்சித்தலைவர், எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் அள்ளிக் கொடுக்கும் தலைவராக வாழ்ந்தனர்.

அதிமுகவை உருவாக்கிய இருவரும் தலைவர்கள் செய்த சேவை தான் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் ஏழைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அவரின் வழியில் அம்மையார் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் ஆட்சி நடத்தினார்கள். 

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வழங்கியது அதனை மீண்டும் அமைக்க எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்" என தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajendra Balaji said again eps rules TN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->