இமயமலையில் இருந்து டெல்லி சென்ற ரஜினி - மோடியுடன் சந்திப்பா?
Rajinikanth Visits Delhi
கடந்த மே 29ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப் பயணமாக இமயமலை சென்றார். உடன் அவரது நண்பர் ஸ்ரீஹரி உள்ளிட்ட மேலும் சிலர் சென்றுள்ளனர். இதையடுத்து இமயமலை சென்ற ரஜினி பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
ஒருவார கால ஆன்மீக சுற்றுப் பயணமாக நண்பர்களுடன் இமயமலை சென்றுள்ள ரஜினி ஜூன் 3ம் தேதியோ அல்லது 4ம் தேதியோ திரும்புவார் என்று கூறப்பட்டது. முன்னதாக ரஜினி இமயமலை பயணம் சென்ற போது, விமானநிலையத்தில் நிருபர்கள் அவரிடம், மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ரஜினி தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இமயமலை சுற்றுப்பயணம் சென்றுள்ள ரஜினி அங்கிருந்து திடீரென நேராக டெல்லிக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் பிரதமர் மோடியை சந்திக்க சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவரிடம் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவே இமயமலை சென்றுள்ள ரஜினி திடீரென டெல்லி சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.