ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பெரும் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து. மேல்முறையீட்டு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து 2000-ம் ஆண்டு கருணையின் அடிப்படையில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே சிறப்பு அதிகாரத்தின் கீழ் தங்களையும் விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன், நளினி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RajivGandhi murder case Supreme Court  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->