திமுக அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில், தகவல் அளிப்பவருக்கு ரூ.50 இலட்சம் வெகுமதி.!
Ramajeyam TNPOLICE KN NERU BROTHER CASE
திமுக அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று, சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்,
"கடந்த 2012 -ஆம் வருடம் மார்ச் மாதம் -29 ஆம் தேதி தொழிலதிபர் திரு. K.N. ராமஜெயம் என்பவர் மரம் நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு குற்றப்பிரிவு தீவிர குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவில் புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கு குறித்து பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது.
எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும், இவ்வழக்கை துப்பு. துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூ.50 இலட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
திரு.S. ஜெயக்குமார், காவல் கண்காணிப்பாளர் : 9080616241
திரு. R. மதன். காவல் துணைக் கண்காணிப்பாளர் : 9498120467, 7094012599
மின்னஞ்சல் ( E - Mail ) முகவரி : sitcbcidtri@gmail.com
English Summary
Ramajeyam TNPOLICE KN NERU BROTHER CASE