ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்.. சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.!!
rameswaram fishing port
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட உள்ளது.
இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றுவருகிறது. விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் வழங்குவார். காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் புதிய துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோல விவசாயிகளை பாதிக்காத வகையில், தொழிற்பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.